கல்லாவி அருகே ஒன்னரை வயது குழந்தை சிவஸ்ரீ தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு திருப்பூரில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார் அவரது மனைவி மாதம்மாள் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஷூ கம்பெனியில் நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு சிவ ஸ்ரீ என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் அவரது பெரியப்பா சண்முகம் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை கவனித்து வந்தனர் இந்த நிலையில் வழக்கம் போல் மாதம்மாள் காலை ஏழு மணி அளவில் தனியார் ஷூ கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் குழந்தை சிவ ஸ்ரீ வீட்டின் அருகே இருந்த தரை மட்ட தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கி உள்ளது சிவ ஸ்ரீயை நீண்ட நேரமாக காணவில்லை என்று தேடிய அவரது பெரியம்மா எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்கு பார்க்கும்போது குழந்தை தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்லாவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இது குறித்து கல்லாவி காவல் ஆய்வாளர் பத்மாவதி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.