19லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்

Loading

பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தில் 19லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை, தார்சலை பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கணபதி ஊராட்சி திருமல்வாடி கிராமத்தில் 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றதுஇதில் பழுதான தார்சாலையை சீரமைக்கவும், அதே போன்று மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றவும் கிராம பொதுமக்கள் கோரிக்கை அளித்திருந்தனர்இதனை ஏற்று ஒன்றிய குழு நிதியிலிருந்து 19லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து திட்டத்திற்க்கு அரசு அனுமதி வழங்கியது, இதையடுத்து பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தார்சாலை, சிமெண்ட் சாலை,பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியினை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணி, ஒன்றிய குழு கவுண்சிலர் சித்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply