பொங்கல் பரிசு வழங்க கோரி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில விவசாய அணியினர் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசில் கரும்பு, வெல்லம், தேங்காய் போன்றவைகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய மாநில அணி தலைவர் சி கே நாகராஜ், பெருங்கோட்ட பொறுப்பாளர் எஸ் ஆர் தேவர், மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க செந்தூர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ஏ பி ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் ஆர் சசிகுமார் முன்னிலை வகித்தனர், விவசாய அணி தலைவர்கள் சே துரை பாஸ்கர், பி முத்துப்பாண்டியன், பூமிநாதன், இரு கண்கள் ஆசிரியர் ஜி பி பாஸ்கரன், மாவட்டத் துணைத் தலைவர்கள் கீரைத்துறை குமார், ஜெயவேல், மீனா இசக்கி முத்து, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், துரை பாஸ்கரன், வினோத் குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் ஹேமலதா, மெகர் நிஷா, சரண்யா மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் அவர்களிடம் மனு அளித்தனர்.