மரக்கிளைகள்,குப்பைகளை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்.
மரக்கிளைகள்,குப்பைகளை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்.செனை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என்.இராஜரத்தினம் 5வது தெரு,கிரேஸ் கார்டன் 5வது தெரு ஆகிய சந்திப்பில் சாலையில் மரக்கிளைகள் மற்றும் அதிக குப்பைகள் சேமிக்கபட்டு அகற்றபடாமல் இருப்பதால் துற்நாற்றம் வீசிவருகிறது என பொதுமக்கள் புகார்தெரிவித்துள்ளனர்.இதனால் அவ்வழியே கடந்து செல்லும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழையால் சாலையில் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தநிலையில் சென்னை மாநகராட்சி துரிதபணியாக மரக்கிளைகளை அகற்றி சாலையை சீரமைத்தது.அகற்றபட்ட அந்த மரக்கிளைகள் சேமிப்பு கிடங்கில் சேமிக்கபட்டு பல நாட்கள் ஆகியும் அதனைமுறையாகஅவ்விடத்தில்சென்னைமாநகராட்சிஅப்புரபடுத்தவில்லைஎனபொதுமக்கள்புகார்தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் அதிகம் கடந்து இந்த பாதையில் தனியார் பள்ளி,மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.சேமிப்பு கிடங்கில் சேமிக்கபட்ட மரக்கிளைகள் மற்றும் குப்பைகளில் இருந்து துற்நாற்றம் வீசி வருவதொடு கொசு உற்பத்தி அதிக பெருக்கம் அடைந்துவருகிறது.இதனால் டெங்கு,மலேரியா போன்ற பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படவாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சபடுகின்றன.எனவே சம்பந்தபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில்கொண்டு சேமிக்கபட்டு அகற்றபடாமல் இருக்கும் மரக்கிளைகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றி அதனை சீரமைத்து தரும்படி பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.