பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Loading

பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய பாஜக அரசை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, அதன் ஒரு பகுதியாக பாலக்கோடு நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சாா்பில் பாலக்கோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
 இதில் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டது சட்டவிரோதமானது, மீண்டும் அங்கே பாபர் மஸ்ஜித் கட்ட வேண்டும், மத்திய பாஜக அரசு சிறுபான்மையினருக்கும், இஸ்லாமியருக்கும் எதிராக செயல்படுகிறது, பாபர் மசூதியை மீட்டெடுப்போம், ஜனநாயகத்தை மீட்டெடுப்போம், போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கைகளில் ஏந்தியும், கோஷமிட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்ராரர், தர்மபுரி நகர தலைவர் ஆட்டோ இம்ரான், விசிக ராஜகோபால், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply