போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி .
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள ஜேக்கப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூவிருந்தவல்லியில் உள்ள சவீதா சட்டக் கல்லூரி சார்பில் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜே.ஒய்,.ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜே.ஜாய்ஸ் மரியா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் தாளாளர் ஆஷா சுந்தரம் மற்றும் உதவி பேராசிரியை கிறிஸ்டி எப்சி மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாரிஷா, சந்தோஷ் குமார் மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இதில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்.
இதில் சட்டக் கல்லூரி மாணவிகள் ஹாரிஷா, நிரஞ்சனா தேவி, லினிட்டா, ஆகியோர் போக்சோ சட்டத்தை பற்றியும், மனநல பாதுகாப்பு சட்டத்தை பற்றியும் மாணவிடம் கலந்துரையாடினார்கள். மாணவி சுகிதா ஸ்ரீ சேகர் மற்றும் குழுவினர் போக்சோ சட்டத்தின் வழிமுறைகளை நாடகமாக எடுத்துரைத்தனர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சமூக சட்ட விழிப்புணர்வுத் திட்டம் [போக்சோ] சட்டம் 2021 மற்றும் மனநலப் பாதுகாப்புச் சட்டம் – 2017 ஆகியவை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உத்திகள் தேவை என்றும், தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவது குற்றம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாணவிகளிடம் எடுத்துரைத்தனர்.இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மருத்துவர் .ஆர்.பிரேம் குமார் கலந்து கொண்டு பேசும் போது, போக்சோ சட்டத்தில் மருத்துவ பரிசோதனையில் டாக்டரின் பங்கு ஆகியவை குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பிற்காக அறிவித்துள்ள 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவிகளிடம் எடுத்துரைத்தனர்.