புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான லட்சுமி என்ற யானை திடீர் மரணம்.
1996 ஆம் ஆண்டு முன்னாள் திமுக முதலமைச்சர் ஜானகிராமன் ஆட்சியில் இருக்கும் போது யானை லட்சுமியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் அயல் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்த அனைவரும் சுற்றுலா வரும்போது புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானை லட்சுமி அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். யானை லட்சுமி இறந்திருப்பது எங்களையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுவையில் செல்லப் பிள்ளையாக வளம் வந்த லட்சுமி யானை இறந்த சோகம் புதுவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பிரசித்தி பெற்ற ஸ்தலத்தில் ஒன்றான ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் 35 வருடமாக கோவிலில் வாழ்ந்து வந்த லட்சுமி என்ற யானை காலை நடை பயணம் செல்லும் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. புதுவைக்கு சுற்றுலா வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் லட்சுமி யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம் இறந்த பிறகு தாங்க முடியாத ஒரு துயரமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
லட்சுமியை பார்த்து சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.