வேலூர் மாவட்ட விளையாட்டு டென்னிஸ் வீராங்கனைக்கு ஊறிய ஊக்கத்தொகை.

Loading

வேலூர் மாவட்டம் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு உரிய ஊக்கத் தொகையினை முதல்வர் மு. க. ஸ்டாலின், வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர்களுக்கு ஊக்கத் தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற வேலூர் மாநகர் லட்சுமி கார்டன் பள்ளியில் பயிலும் ராகஸ்ரீ பிளஸ் டூ டென்னிஸ் வீராங்கனை மாணவிக்கு ஊக்கத் தொகையினை தமிழக முதல்வர் வழங்கினார்.

0Shares

Leave a Reply