ராணிப்பேட்டையில் ரூ.41.98 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணியை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் துவக்கி வைத்து
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சி பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.41.98 கோடி மதிப்பீட்டில் செம்பேடு மற்றும் 88 இதர குக் கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் பூமி பூஜை போட்டு பணியினை துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் சுபவாணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சக்தி, வட்டாட்சியர் சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர் ஞானமணி, ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம், ஒப்பந்ததாரர் சேட்டு மற்றும் பலர் உடன் இருந்தனர்.