மதுரை மாவட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆனையூர் பகுதிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இருந்து திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீரை  திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், அவர்கள் மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் அவர்கள். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

0Shares

Leave a Reply