சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைப்பெற்றது
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் ,சொக்குவள்ளியப்பா, ,தியாகுவள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் ,வள்ளியப்பா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஐ.ஐ.ஐ.டி நிறுவன இயக்குனர் முணைவர் சடகோபன் மற்றும் கெளரவ விருந்தினராக சென்னை சி.எஸ்.எஸ்.கார்ப் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ,மணிகன்டன் ராமசந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அகடமிக் டீன் அகிலாண்டேஸ்வரி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கல்லூரியின் துணைத்தலைவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் சிறப்பு விருந்தினர் முனைவர் சடகோபன் பேசும் பொழுது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க வேண்டுமென்றும் இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்றார். இதனை தொடர்ந்து கெளரவ விருந்தினர் ,மணிகன்டன் ராமசந்திரன் பேசும் பொழுது சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் நீங்கள் பெருமை பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சோனா கல்வி குழுமத்தின் தலைவர் ,வள்ளியப்பா பேசும்பொழுது, வாழ்வின் முக்கியத்தருணமான இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது, குறித்தும் மேலும் சோனா கல்லூரி தலைச்சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது இதணை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நாவஷ், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை துறைத்தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக டீன் அட்மிஷன் சத்தியபாமா நன்றியுரையாற்றினார்.