திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் உதவியாளர் பணியின் போது மாரடைப்பால் மரணம்

Loading

திருவள்ளூர் அக் 27 : 
திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறைக்கு உட்பட்ட பி பிரிவில் (நில உரிமை மாற்றம்) வருவாய் உதவியாளராக பணி புரிந்தவர் கருப்பசாமி (42).  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆவடி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் பணியாற்றி வந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த கருப்பசாமி வழக்கம் போல் நேற்று (25.10.2022) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.  அதனைத்தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  11 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சக ஊழியர்கள் அவரை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் கருப்பசாமி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். வருவாய் உதவியாளர் கருப்பசாமியின் மரணத்தால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *