ஆற்றுப்பாலம் உடைந்ததால் 2 கிராமங்கள் துண்டிப்பு.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் கெலமங்கலம் அருகே ஐந்து ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது, இந்த தண்ணீரானது பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு வந்ததது, அணையி்ன் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது, கட்டுக்கடங்காத வெள்ளமும், தற்போது தொடரும் மழையும் சேர்ந்து பெரு வெள்ளமாக மாறி சக்கிலிநத்தம் கிராமத்திலுள்ள ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவர்கள் உடைந்தது, இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாலத்தில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது
சக்கிலிநத்தம் மற்றும் பிக்கிலி கிராமத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த கிராமமக்கள் ஆற்றங்கரையோரம் செல்லவேண்டாம் எனவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது
பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தாலுக்காக்கள் இணையும் எல்லைப்பகுதியில், இந்த பாலம் அமைந்திருப்பதால் இரண்டு வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளும் போக்குவரத்தை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்..
வெள்ள நீர் உடைந்த பாலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், ரவி, தாசில்தார் ராஜசேகர், பொது பணித் துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மழை நீர் வடிந்ததும் போக்குவரத்து சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
பாலம் சேதம் அடைந்திருப்பதால் கிராம மக்கள் சுமார் பத்து கிலோ தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது