திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள 41 பயனாளிகளுக்கு ஆணை : எம் எல் ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்
திருவள்ளூர் அக் 22 :
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள 41பயனாளிகளுக்கு எம் எல் ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் எஸ் பிரபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.பிரதாப் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ப. சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தா.மோதிலால், மாவட்ட கவுன்சிலர் சிவசங்கரி உதயகுமார், நிர்வாகிகள் அ. ஆனந்த், தா. நடராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம் எம் லிங்கேஷ் குமார், எம் கெளதம், சி. ஜெயச்சந்திரன், ஆர்.தனசேகர், கஜேந்திரன், சங்கர், ஜோசப், தன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.