மீண்டும் நடிக்க வரும் பிரணிதா

Loading

ஆண் குழந்தை பெற்று நான்கு மாதங்களுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்க வந்து இருப்பதுபோல் பிரணிதாவும் மீண்டும் நடிக்க வருகிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, உதயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

கடந்த வருடம் நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
ஜூலை மாதம் பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ணா என்று பெயர் வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் கவர்ச்சி உடையில் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணமானதையும், குழந்தை பிறந்ததையும் மறந்து வீட்டீர்களா? என்று கேலி செய்தனர்.

இந்த நிலையில் ஆண் குழந்தை பெற்று நான்கு மாதங்களுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்க வந்து இருப்பதுபோல் பிரணிதாவும் மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குனர்களிடம் பிரணிதா கதை கேட்டு வருகிறார் என்றும், அவர் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

0Shares

Leave a Reply