ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இருசக்கர வாகன திருட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இருசக்கர வாகன திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தது.
அதனை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபாசத்யன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் படி ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் வினாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
முப்பது வெட்டி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர்கள் மஹாராஜா, உதயசூரியன் ஆகியோர் அவ்வழியே வந்த இரண்டு நபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் டெல்லி கேட் அருகே மறைத்து வைத்திருந்த சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.