மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

அமைப்புச் செயலாளர் ஜெங்கின்ஸ் ,வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஜூலியஸ்,பொருளாளர் கமலேஷ்,இணைச் செயலாளர் சௌமியா,துணைச் செயலாளர் இமாம் பாதுஷா,பொதுக்குழு உறுப்பினர் சகாயடெல்வர், ஒன்றிய செயலாளர்கள் ஜெகன் ஆனந்த், துரை சிங்கம் ,ஆறுமுகம், மாநகர பகுதி செயலாளர் முத்துக்குமார் ,  அறிவழகன்,இலக்கிய அணி இணைச் செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை ,மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன், இணைச் செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பொது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் கொட்டும் மழையில் நனைந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply