சுங்கச்சாவடி ஊழியர் உண்ணாவிரத போராட்டம் தொடர்நிலைப் போராட்டமாக மாற்றி அமைப்பு
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்க சாவடிகள் 28 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து 8 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்,
பின்பு தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எடுத்துக்கூறி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொண்டதின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர், அவர்களுக்கு திமுக ஒன்றியக் கழக துணைச் செயலாளர் டி.கே.முருகன்.அவர்கள் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து தொடர்நிலை போராட்டமாக போராட வேண்டி அறிவுறுத்தியதன் பேரில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர் .
பிறகு போராட்டத்தை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டமாகவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் எடுத்துச் செல்ல இருக்கின்றனர், உடன் கூட்டமைப்புத் தலைவர் சுவாதி முருகன், துணைத்தலைவர் நாகராணிவெங்கடேசன், துணைசெயலாளர்கள் குணாவெங்கடேசன், சுகந்திகாமராஜ், சத்யா இளவரசன், பூபதிமுருகன் மற்றும் சங்கநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.