கோவை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்து , வழிமொழிந்து தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தனர்
கோவை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், பொதுச் செயலாளர் பதவிக்கு மாண்புமிகு அண்ணன் துரைமுருகன் அவர்களும், பொருளாளர் பதவிக்கு மாண்புமிகு அண்ணன் டி ஆர் பாலு அவர்களும் போட்டியிடுவதற்கு, கரூர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களும், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் Ex எம்எல்ஏ அவர்களும் , கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ .ரவி அவர்களும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் போட்டியிடுவதற்கு முன்மொழிந்து , வழிமொழிந்து தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், தொண்டாமுத்தூர் தியாகு மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.