வேலூர் தொழிற்கல்வி ஆசிரியர்   ரோட்டரி சங்கங்கள் சார்பில் நல்லாசிரியர் விருது

Loading

வேலூர் அக்டோபர்
வேலூர் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  வேலூர் தெற்கு, காட்பாடி மற்றும் வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் என மூன்று சங்கங்கள் இணைந்து நடத்திய எழுத்தறிவு மாத நிறை விழா மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா குடும்ப கூடுகை விழா என முப்பெரும் விழா காட்பாடி காந்திநகர் மகளிர் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தெற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெ.பிரகாஷ்ராஜ், காட்பாடி தலைவர் ஜி.சுஜஸ், ஏஞ்சல்ஸ் சங்க தலைவர் டி.எல் அருளரசி ஆகியோர் தலைமை தாங்கினார்கள், சங்கத்தின் செயலாளர்கள் எம்.விஜயகுமார், எஸ்.பத்ரிநாத், இமாலினிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.மேலும் சிறப்பு நிகழ்வாக அக்கால கல்வி முறையே சிறப்பானது என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது .
அணைக்கட்டு ஒன்றியம் தார்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் தலைமையாசிரியர் ஜி.சேகர் வழக்கு தொடுத்தார் அதனை தொழிலதிபர் பி.பூமிநாதன் மறுத்து பேசினார்.  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் வி.பாஸ்கர் தொகுத்து பேசினார். வேலூர்வெங்கடேஸ்வராபாலிடெக்னிக்கல்லூரிதுணைத்தலைவர் ஜனார்த்தனன்வாழ்த்திபேசினார்.சிறப்புவிருந்தினராகஇராணிப்பேட்டை பிரைட் மைன்ட்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர்டபிள்யு.எம்.நிர்மல்ராகவன்நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
0Shares

Leave a Reply