ஆனந்தூர் ஊராட்சியில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூர் ஒன்றியம் ஆனந்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
ரூ. 18.80 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா நடைபெற்றது.
இதில் விழாவிற்கு கிருஷ்ணகிரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.
ஒன்றிய செயலாளர் தேவராசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவித்ரா சிலம்பரசன், பேராஜான் ராமன் மலர்கொடி சுந்தரவடிவேல், ஜெயந்தி புகழேந்தி, மீனா சக்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முரளிபிரகாஷ்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, கெரிகப்பள்ளி முன்னாள் தலைவர் கமலநாதன், அத்திப்பள்ளம் முருகன், முனுசாமி, வேலன்,வாசுதேவன் சுண்ணாம்பட்டி சிவராஜ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமாக கலந்து கொண்டனர்.