பெட்ரோல் குண்டுகளுக்கு பின்னணியில் இருப்பது முஸ்லீம் அமைப்புகள் அல்ல பாஜக. தான் என்று எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
பெட்ரோல் குண்டுகளுக்கு பின்னணியில் இருப்பது முஸ்லீம் அமைப்புகள் அல்ல பாஜக. தான் என்று எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், சென்னையில் பேட்டிளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார், நடந்தது எதுவும் பெட்ரோல் குண்டு வீச்சுகளல்ல.மண்ணெண்ணெய், டீசல் குண்டு என்பதை காவல்துறையினரே கூறியிருக்கிறார்கள்.பாஜகவினர் வீடுகளில் வீசப்பட்ட குண்டு வீச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.காவல்துறையினரும் எங்கள் மீது எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை முதல்வரிடம் நேரில் சந்தித்து முறையிட போவதாக நெல்லை முபாரக் தெரிவித்தார் மேலும் தங்கள் மீது புகார் சொல்லும் பாஜகவினரே குண்டு வீச்சு நாடகம் நடத்துவதாக அவர் கூறினார்