ஒவ்வொரு வார்டு வாரியாக வீடு வீடாக சென்று என்ன என்ன குறைபாடுகள் இருக்கிறது என்ன என்ன நல்ல திட்டங்களை மக்கள் கொண்டுவர வேண்டும்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் மாநகராட்சி மேயர் ஆணையாளர் பொறியாளர் சுகாதார அலுவலர் மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டு வாரியாக வீடு வீடாக சென்று என்ன என்ன குறைபாடுகள் இருக்கிறது என்ன என்ன நல்ல திட்டங்களை மக்கள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை கேட்டு அறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்கவும் கழிவு நீர் ஓடை வசதிகளை சரி செய்யவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களிடமே கேட்டறிந்து வார்டு வாரியாக இருசக்கர வாகனத்திலும் நடந்து சென்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலமையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் துவக்கமாக நேற்று முதலாவதாக 7வது மற்றும் 8-வது வார்டு மாமன்ற உறுப்பினர்களையும், மாநகராட்சி அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்று குறைகள் உள்ள அத்தனை தெருக்களையும் பார்வையிட்டார். அதன் பின் அவர் கூறுகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள குறைகள் அனைத்தையும் ஒவ்வொரு வார்டு வாரியாக குறைகள் அனைத்தும் கோப்பு தயார் செய்து நகர திட்ட அலுவலர் ஆகியோரிடம் கொடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்யும் போது நாங்கள் என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அந்தந்த மண்டல பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தாங்கள் குறிப்பு எடுத்து வைத்திருக்க கூடிய அத்தனை பணிகளுக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்து தருவார்கள். நிதி ஒதுக்கீடின் அடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் எதனை உடனே செய்ய வேண்டுமோ அதை உடனே செய்து முடித்துக் கொடுப்பதற்காக நாங்கள் 52 வார்டுகளுக்கும் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல் துவக்கமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 7 & 8-வது வார்டுகளில் இருந்து முதல் ஆய்வு பணிகளை துவக்கி உள்ளோம் அனைத்து அதிகாரிகள் மற்றும் மண்டல தலைவர்கள் நேரத்தை கணக்கில் கொண்டு கால விரயம் செய்யாமல் இந்த ஆய்வை செய்துமுடிப்பதாக கூறினார்..

0Shares

Leave a Reply