உலக இதய தினத்தை முன்னிட்டு ராம்நகரை சேர்ந்த எஸ்.பி.டீ மருத்துவமனை சார்பாக மாபெரும் விழிப்புணர்வு வாக்கத்தான் நடை பயிற்சி இன்று நடைபெற்றது.
கோவை இராம் நகர் பகுதியில், இன்று எஸ்விடி மருத்துவமனை சார்பாக, மருத்துவமனையின்
தலைவர் சுப்புராஜா தலைமையில் உலக இதய தினத்தை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் இருந்து வ உ சி பூங்கா மைதானம் வரை விழிப்புணர்வு வாக்கத்தான் பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் சிறுநீரக துறையின் முன்னோடியான மருத்துவர் ஸ்.பி. தியாகராஜன் இந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாக்கத்தான் பேரணியின் மூலமாக உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை சீர்கெடுதலால் வரும் நோய்களை பள்ளி, கல்லூரி மற்றும் தகவல் தொழிற்நுட்பம் போன்ற துறைகளில் இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் சுப்புராஜ் கூறும் போது
பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதில் எஸ்.பி.டீ மருத்துவமனை தீவிரம் காட்டி வருகிறது
சமீப காலமாக சிறை கைதிகளுக்கான மருத்துவ சேவையும் செய்துவருகிறது.
இன்று உலக இருதய தினத்தை முன்னிட்டு அரிமா சங்கம் மற்றும் எஸ்.என்.ஸ் கலை கல்லூரியுடன் இணைந்து நடத்தும் இருதய நோய் விழிப்புணர்வு பேரணியில் காவல் துறை துணை ஆணையர் சுகாசினி கலந்து கொண்டார்.மற்றும் இதில் முக்கிய பங்குவகிக்கும் விதமாக துணை மேயர் வெற்றிச்செல்வன் மாநகராட்சி பணி குழு தலைவர் சாந்தி முருகன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகநாதன் என பலரும் கலந்து கொண்டார்.