ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா; கொண்டாடும் ரசிகர்கள்

Loading

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் “சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா போன்ற பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். சாய் மாதவ் வசனங்கள் எழுத, குணசேகர் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாகுந்தலையாக சமந்தா நடித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அனைவரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்த நிலையில், நடிகை சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி சாகுந்தலம் படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *