அரசப்பபிள்ளைபட்டியில் வருவாய்த் துறை சார்பில் மக்களின் கோரிக்கை மனு பெறும் முகாம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மண்டல அளவிலான மக்களின் கோரிக்கை மனு பெறும் முகாம் வட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இம் முகாமில் திமுக ஒன்றிய செயலாளர் தி.தர்மராஜன் முன்னிலை வகித்தார்.மேலும் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியார், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் கண்மணி கருணா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் சுரேஷ்குமார், திமுக கிளைச் செயலாளர் முருகேசன், உள்ள மக்களின் கோரிக்கைகளான, வீட்டுமனை பட்டா வீடு பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நிலம் வழங்க, கால்நடைகள் வளர்க்க, உள்ளிட்ட, கோரிக்கைகளை மனு மூலமாக வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரிடம் மனுக்களை கிராம பொதுமக்கள் கொடுத்தனர் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளரை கொண்டு சில மனுக்களின் மீதான தன்மையை பொறுத்து உடனடியாக இம முகாமில் தீர்வு காணப்பட்டது. முகாமில் சில மனுக்களின் மீதான மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டது.இம்முகாமில் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சியை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.