* சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் சைக்கிள் கழகம் தொடக்க விழா*
காளையார்கோவிலில் சைக்கிள் கழக தொடக்க விழா அரசு மேல்நிலைப்பள்ளி வளாக முன் பகுதியில் நடைபெற்றது. சைக்கிள் கழகத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பக்கீர் முகைதீன், செஞ்சிலுவை சங்க சேர்மன் தெய்வீக சேவியர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் சூசை ஆரோக்கிய மலர் வரவேற்றார். தலைவர்கள் கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்கள். சைக்கிள் கழக உறுப்பினர்கள் புதிய சீருடை, ஹெல்மெட் அணிந்து காளையார்கோவில் நகரை ஐந்து முறை சுற்றி வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இறுதியாக பேரணி சொர்ண காளீஸ்வரர் கோவில் கோபுர முன்பகுதியில் நிறைவுற்றது. சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி இந்திய நாட்டின் 75 ஆவது அமுத பெருவிழாவை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தேச தலைவர்கள் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், வ. உ. சிதம்பரனார், பாரதியார், வேலுநாச்சியார் ஆகியோரின் முகமூடிகளை வழங்கினார்.
அறிவியல் அமைதிக்கு என்ற முழக்கத்துடன் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் என்பதை வலியுறுத்தி எங்கள் தேசம் புத்தகம் வழங்கப்பட்டது. சைக்கிள் கழக செயலாளர் கணேசன் நன்றி கூறினார். பொருளாளர் ஜான் பீட்டர், சட்ட ஆலோசகர் சேது பாண்டியன், ராமர்பாண்டி, கவிதை கண்ணன், அருள் ஜெய்சிங், ஜான்சன் ஜெயக்குமார், கார்த்திக், முத்துக்குமார், பழனிச்சாமி, மாயமுருகன், பாலமுருகன், ரமேஷ், ஜெகதீஷ், பார்த்திபன், ஸ்டீபன் கலந்து கொண்டார்கள்.