சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா
![]()
சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அகமதாபாத் செல்லும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நினைவுப் பரிசாக சதுரங்கப் பலகையை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மாண்புமிகு ஒன்றிய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

