வள்ளிமலை ரத்தனகிரி கோவில்களில் ஆடி கிருத்திகை திருவிழா.
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மலை மேல் உள்ள முருகனுக்கும் மலை அடிவாரத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வயானைக்கும் விசேஷ அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைஆகியவைநடைபெற்றது.
இந்த ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை மாற்றம் காணிக்கையை கோவிலில் செலுத்தினர் அதேபோல் சரவண பொய்கையில் மின் அலங்கார தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு தினமும் நாதஸ்வர கச்சேரி நடந்தது இந்த ஏற்பாட்டை இந்து அறநிலைத்துறை ஆய்வாளர்தர்க்கர்சிவராமகிருஷ் ணன், மற்றும் செயல் அலுவலர் மாதவன், இந்து அறநிலைத்துறை ஊழியர்கள்பக்தர்கள்செய்திருந் தனர்.
அதேபோல் ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு காலையில் அபிஷேகம் அலங்காரம்தீபாராதனை ஆகியவை நடைபெற்றது இந்த கோயில் சுற்றுவட்டாரத்தில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து தங்களின் காணிக்கையை செலுத்தி பாலமுருகனை வழிபட்டு சென்றனர்.