கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் ( Get to Gether ) நிகழ்ச்சிகள் கடந்த 16.7.2022 ஆம் தேதி நடைபெற்றது

Loading

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் ( Get to Gether ) நிகழ்ச்சிகள் கடந்த 16.7.2022 ஆம் தேதி நடைபெற்றது .
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தின் காவல் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்தினருக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் குடும்பத்தார்கள் கழிவு நீர் அடைப்பு , மற்றும் கழிவு நீர் தொட்டியில் நிரம்பிய கழிவு நீரை அகற்ற வேண்டும் எனவும் .
குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்கு அமைக்கவும் காவல் குடும்பத்தார்கள் கோரிக்கை விடுத்ததின்பேரில் குறிஞ்சிப்பாடி உதவி ஆய்வாளர் திரு . பிரசன்னா அவர்கள் பேரூராட்சி 11 வது வார்டு கவுன்சிலருக்கு காவலர் குடியிருப்பு பிரச்சனைகளை தீர்க்க கடிதம் அனுப்பியதின்பேரில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் இன்று குறிஞ்சிப்பாடி காவலர் குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றபட்டுள்ளது .
மேலும் காவலர் குடியிருப்புகளில் தெரு விளக்குகள் எரிய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பேரூராட்சி சார்பில் தெரிவித்துள்ளனர் . குறிஞ்சிப்பாடி காவலர்கள் குடும்பத்தாரின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்ட குறிஞ்சிப்பாடி உதவி ஆய்வாளர் திரு . பிரசன்னா அவர்களுக்கு காவல் குடும்பத்தார்கள் நன்றி தெரிவித்தனர் .
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *