புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் பற்றிய குழுவினர் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் பற்றிய குழுவினர் ஆலோசனை கூட்டம் காலை 11.00 மணி அளவில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது. ஆலோசனையில் மின்சாரத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, மற்றும் பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனம் (ஸ்மார்ட் சிட்டி) ஆகியவற்றில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துறை அமைச்சர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் அறிவித்த நலத்திட்ட உறுதி மொழிகளை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை. சட்டப்பேரவை உறுதிமொழிகள் குழு தலைவர் G.நேரு (எ) குப்புசாமி M.L.A. தலைமையில் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்களான அனிபால் கென்னடி,MLA., V.P.ராமலிங்கம் M.L.A., A.K.D.ஆறுமுகம் M.L.A, .R.B. அசோக் பாபு,M.L.A., M.சிவசங்கரன் M.L.A.,மற்றும் சட்டப்பேரவை செயலர் R.முனுசாமி கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்…
சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அளித்த உறுதிமொழி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட துறைகளில் உயர் அதிகாரிகளான…. கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடா, ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிட்டி பால்ராம் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.