மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு வழக்குகள் தாக்கல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆகியுள்ளன. இதனையடுத்து மேற்படி வாகனங்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு அவர்களின் மேற்பார்வையில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் ராஜபாண்டி வயது 22, த/பெ ஈஸ்வரன், பாறைப்பட்டி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது பின்னர் மேற்படி நபரை தனிப்படையினர் கைது செய்தனர். மேற்படி நபரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டதில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஏழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி திருமங்கலம் மதுரை காளவாசல் ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் இது தவிர திண்டுக்கல் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் பகுதிகளிலும் இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்களில் தொடர்புடையதும் தெரியவந்தது. பின்னர் மேற்படி நபரிடம் இருந்து 16 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரியை கைது செய்து 16 இருசக்கர வாகனங்களை மீட்ட தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.