சிறுமி பாலியல் வன்கொடுமை…!
![]()
குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனை தேடி வருபவர்களை சுதா மருத்துவமனை மருத்துவர்கள் நெஞ்சில் ஈரமில்லாது , பிஞ்சுக்குழந்தை என்று தெரிந்தும் இரக்கம் காட்டாத மருத்துவர்களை நினைத்து பதற வைக்கிறது, செய்தி படிப்பவரை வியக்கவக்கிறது….!
சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோயில் கிராமடை ,கதவு எண் 156 இல் வசித்துவந்த சரவணன் – இந்திராணி தம்பதியருக்கு 2006 இல் பிறந்த குழந்தை சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறு குழந்தையாக இருக்கும்பொழுது சரவணன் பிரிந்ததால் ,தனது வாழ்வில் உழைப்பின் ஆதாரமாக கருமுட்டை விற்பனை செய்வதே தொழிலாக கொண்டிருந்திருக்கிறார் , இந்திராணிக்கு இடையில் வாழ்க்கை துணையாக சையது அலியுடன் வாழ்ந்து வந்துள்ளார் குழந்தை சந்தியா 12 வயதில் பூப்படைந்ததால் அந்தக் குழந்தையையும் ருசி பார்த்து இருக்கிறார் காமுகன் சையத் அலி, இந்திராணியும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார், இந்திராணி செய்த தொழிலை தன் மகளையும் ஈடுபடுத்த நினைத்து அதற்கு சையது அலி உதவி செய்துள்ளார் ,அதாவது தனது மகளை கரு முட்டை வழங்கும் தொழிலில் ஈடுபடுத்தி அதில் வரும் தொகையை பயன்படுத்தி வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது கடைசியாக கடந்த மே 15 தானமாக கொடுத்த அன்றைய மறுதினம் உடல் அசதி ஓடு படுத்திருந்த சந்தியாவிடம் தவறு செய்ய நினைத்த சையத் அலி சம்மதிக்காததால் அடித்து துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் ஒரு மணி நேரம் நான் தூங்கிக் கொள்கிறேன் பிறகு உடலுறவு கொள்ள சம்மதிப்பதாக காய் நகர்த்திய சந்தியா ஏற்கனவே அதாவது ஏழாவது முறை கருமுட்டை கொடுத்த சேலம் சுதா மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்ட ரேஷ்மா ,உஷா, ஆகியோர் அறிமுகம் ஆன நபர்கள் என்பதால் சேலம் ரேஷ்மா வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு தப்பித்து சேலம் கொண்டலாம்பட்டி ரேஷ்மாவிடம் நடந்தவற்றை பகிர்ந்துகொண்ட சந்தியா இரு தினங்கள் அங்கேயே தங்குகிறார் சந்தியாவை காணவில்லை என இந்திராணியும் சையத் அலியும் தேடுகின்றனர் ரேஷ்மாவின் தோழியான உஷா விற்கு போன் செய்தபோது ரோட்டில் நடந்து செல்வதை தெரிய படுத்துகிறார் வீடு தெரியாது என்பதால் தொலைபேசி மூலமாக அடையாளம் தெரிவித்து சந்தியாவை பார்க்க ரேஷ்மா வீட்டிற்கு வந்து விடுகின்றனர் சந்தியாவை பார்த்ததும் இந்திராணியும் சையத் அலியும் அடிப்பதைப் பார்த்த ரேஷ்மாவின் கணவர் தட்டிக் கேட்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் கூடுகிறது அன்றைய தினம் சேலம் வந்த முதல்வர் பாதுகாப்பு போலீசாருக்கு தெரிய வரவும் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி அவர்களின் மொபைல் நம்பரை வாங்கி செல்கின்றார் அன்னதானப் பட்டியில் விசாரணை மேற்கொண்ட பொழுது ஈரோட்டிலிருந்து இந்திராணியின் தங்கையும் சென்ற பொழுது ஏற்கனவே சையத் அலியும், இந்திராணயும், சந்தியாவிடம் பேசி குற்றங்களை மறைத்து விட்டனர் சந்தியா போலீசாரிடம் காப்பகம் செல்கிறேன் எனது தாயுடன் ஓம் அல்லது வேறு நபரிடம் செல்ல வாய்ப்பு இல்லை என்று பதில் அளித்ததால் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் அதாவது இந்திராணியின் தங்கை சம்மதம் தெரிவித்து சந்தியாவை அழைத்து ஈரோடு வருகின்றனர் சந்தியாவை இந்திராணியின் தங்கை வீட்டில் தங்க வைத்து இருந்தபொழுது சையத் அலி அக்காள் மருமகனை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்துகிறார் மூன்று கட்டமாக மூன்று குழுவாக பேச்சுவார்த்தை நடைபெறும் சந்தியா சம்மதிக்காமல் பாதிக்கப்பட்ட நான் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் அவர்களும் படவேண்டும் என ஒரே நிலையாய் இருந்ததால் சந்தியாவின் பாதுகாப்பு கருதி அவரது சித்தப்பா நண்பருடன் நேரில் ஈரோடு எஸ்.பி ., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு ஈரோடு தெற்கு சூரம்பட்டி காவல் நிலையத்தை விசாரணை மேற்கொண்டனர் விசாரணையின்போது மாலதி கைகட்டிவலசு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருமுட்டை புரோக்கராக, சுதா மருத்துவமனை இவரை கைகாட்டி தப்பிக்கிறது அதன் பிறகு நடந்த விசாரணையில் சூரம்பட்டி பாரதிபுரம் அந்தோனி மகன் ஜான் வயது 25 என்பவரும் கைதாகியுள்ளார்.
மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி என்று அழைக்கப்படுகின்றது ஆனால் பிஞ்சு குழந்தையின் முகம் பார்த்ததும் மருத்துவர்களுக்கு அடையாளம் தெரிந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் தெரிந்திருந்தும் இந்த குற்ற செயலை இவர்கள் செய்து இருப்பதற்கு இனிமேல் இந்த குற்றம் செய்யாது பாதுகாக்க சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு இது போல் சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 10 கிளைகள் அமைத்து மாபெரும் விளம்பரத்தை ஆசை வார்த்தை காட்டி குழந்தைபாக்கியம் இல்லாதவர்களை குறிவைத்து தோராயமாக 10 லட்சம் முதல் கோடிவரை பெறுவதாக கூறுகின்றனர் கிளைகளை அமைக்க ஆர்வம் காட்டும் மருத்துவமனை நிர்வாகம் கிளைகளில் மருத்துவம் தரமாகவும், சிறந்த மருத்துவர்களை கொண்டு இயங்காததால் இதற்கு முன்பும் இது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏற்பட்டது குறித்து அப்போதைய கட்டப்பஞ்சாயத்து செய்த பிஜேபி மொடக்குறிச்சி எம்எல்ஏ எனவும் பாதிக்கப்பட்ட குடும்ப நபருக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு எந்தவித உதவியும் வழங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியது, தற்போது சட்டத்திற்கு புறம்பாக அதாவது ஒரு பெண்ணிடம் 6 தடவைகள் மட்டுமே கருமுட்டைகள் பெறமுடியும் மேலும் 25 வயதிற்கு மேல் 35 வயதிற்குள் இருப்பவராகவும் குழந்தை பெற்ற பெண்களிடம் மட்டுமே கருமுட்டை பெற வேண்டும் என்று மருத்துவ சட்டம் சொல்கிறது அதையும் இந்த மருத்துவமனை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை இதுபோல் திட்டமிட்டு பல கிளைகளை அமைத்து பிஞ்சுக் குழந்தைகளை குறி வைத்து அவர்களது பெற்றோர்களை பணத்தைக் காட்டி, குழந்தைகள் வாழும் நாட்களை கேள்விக்குறியாக்கி சிதைத்து கொண்டிருக்கிறது “சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை”, காவல்துறை விசாரணை நடைபெறுவதாக அறிக்கை சமர்ப்பிப்பது ,வெளியிடுவது மட்டுமே…! தவிர மருத்துவமனையை காப்பாற்றுவதில் முனைப்பாக செயல்படுவது தெரிய வருகிறது!

