சத்துவாச்சாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 99. வதுபிறந்த நாள் விழா.
![]()
வேலூர் பாராளமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கொடி ஏற்றினார்.
வேலுார் மாவட்டம் சத்துவாச்சாரியில்
மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 99. வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலுார் சத்துவாச்சாரி வள்ளலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ், தலைமை வகித்தார். வேலுார் தி.மு.க., பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், விழாவில் கலந்து கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனைத்தொடர்ந்து 1800 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கினார். விழாவில், மூத்த நிர்வாகி சுப்பிரமணி, கவுன்சிலர் சுகுமார், வக்கீல் பாலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

