வார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் பத்திர பதிவு நடைபெறும் -என்று தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது
தமிழகத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் செயல்படும். அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000-/ வசூலிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில்,
வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் 2022-2023 – ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்ற அறிவிப்பினை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க மாநிலத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் இயங்கும் வகையிலும் அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000-/ வசூலிக்கப்படும் என்றும் இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமை மற்றும் பணியாளர்களது நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை பணி நாளை ஈடு செய்யும் விதமாக வாரநாட்களில் வேலை குறைந்த ஏதேனும் ஒரு நாளில் விடுப்பு வழங்கிட ஏதுவாக உரிய மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் உரிய அரசாணை
ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு செய்த நாளான 28.04.2022 அன்றே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.