மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில்  (23.04.2022) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் IAS  தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவில் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கலத்து கொண்டு, பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பேசுகையில்:-  நமது மாவட்டம் கடையாதுமுடு பகுதியை சேர்ந்த சமீரா என்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு வெளிநாடு செல்வதற்கு பல தடைகள் இருந்தது. பின்னர் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறணளிகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றார்கள். இந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விளையாட்டுத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.

கலைகளிலேயே சிறந்த மற்றும் மிகவும் அற்புதமான கலை சிலம்பக்கலை ஆகும். இக்கலை போர்க்கலை ஆகும். நமது மாவட்டத்தில் களரி போன்று பல்வேறு பெயர்களில் சிலம்பக்கலை அழைக்கப்படுகிறது. இதில் பல உட்பிரிவுகள் உள்ளது. நான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலம்பக்கலை குறித்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலிப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார்கள். விளையாட்டு என்பது நமது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.

மாற்றுத்திறனாளிகள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் தன்னம்பிகையுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவில் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  பாதிக்கப்பட்ட 36 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோகமாக  இணைப்பு சக்ரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு தகவல் தொழில் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி வதா, மாவட்ட மாற்றுத்திறணனி நல அலுவலர் பிரம்மநாயகம்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், மரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரசல் ராஜ் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் கலா ராணி, ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *