ரூ.21.60000/- மதிப்புள்ள 72 பவுன் தங்கநகைகள் திருட்டு… குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருட்களை அதிரடியாக மீட்ட குமரி போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு சார்ந்த பாலையா நாடார் மகன் ஆனந்தன் என்பவர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தன்னுடைய மனைவி தீபாவளி அன்று நகைகளை அணிந்து விட்டு கழட்டி வைத்த சுமார் 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 72 பவுன் தங்க நகைகளை காணவில்லை என்ற புகார் மனு அளித்தார். இப்புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இவ்வழக்கை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் நேசமணி நகர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது சந்தேகத்தின் பெயரில் அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரணை நடத்தும் போது முன்னுக்கு பின் பதிலளித்தனர். இதனை தொடர்ந்து இருபரையும் கைது செய்து விசாரித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டது, அதே வீட்டில் வேலை பார்த்து வந்த மயிலாடியை சார்ந்த நாகராஜன் என்பவரது மனைவி 40 வயதுடைய அனிதா என்பதும், அருகுவிளை ஊரை சார்ந்த குமார் என்பவரது மனைவி மகேஸ்வரி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவ்விருவரையும் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து திருட்டுபோன சுமார் ரூ.21,60,000/- மதிப்புள்ள 72 பவுன் தங்கநகைகளும் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு திருட்டு பொருள்களை மீட்ட ஆய்வாளர் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்..