வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் மாவட்டத்தில்  போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதிலும், கஞ்சா குட்கா மற்றும் போதை  பொருட்கள் விற்பனை போன்றவற்றை ஒழிப்பதிலும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் (05.04.2022) வடசேரி அண்ணா சிலை முன்பு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதியை மீறி வந்தவர்களுக்கும்  போக்குவரத்து  விதிகள் குறித்து அறிவுரை  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் நேரடியாக வாகன சோதனையில்  ஈடுபட்டது  பொது மக்களிடம் பெரும் வருவேட்பை பெற்றுள்ளது. இந்த வாகன சோதனையின் போது துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்…

0Shares

Leave a Reply