டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளின் முழு திறனைளவை எட்ட ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து தொடர் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது மிக முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்தல்
டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளின் முழு திறனைளவை எட்ட ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து தொடர் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது மிக முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்தல்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக டவுன் சிண்ட்ரோம் தினத்தையொட்டி டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இலவச உடல் நல பரிசோதனையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தியது.
டவுன் சிண்ட்ரோம் என அழைக்கப்படும் குரோமோசோம் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் ஆதரவோடு ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிக முக்கியம் என சிண்ட்ரோம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர்.சுரேகா இராமச்சந்திரன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் மரபணுவியல் நிபுணர் டாக்டர்.பிரதீப் குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர்.ரமேஷ் அர்த்தநாரி, மரபணுவியல் நிபுணர் டாக்டர் பிரதீப் குமார், மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர்.கண்ணன், மருத்துவ நிபுணர் டாக்டர்.உமா முரளிதரன் ஆகியோர் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தனர்.