தமிழக சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது, பட்ஜெட் குறித்து இன்று ஆலோசனை நிதியமைச்சர் தியாகராஜன் நடத்துகிறார்
சென்னை, பிப்- 21
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் குறித்து தொழில்அதிபர்களுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்,
தமிழக சட்டமன்றம் விரைவில் மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கிறார்,தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெற்றது, இதற்கிடையே தமிழக சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது, இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கிறார்,இதற்கான பணிகளை இன்று முதல் அவர் தொடங்க இருக்கிறார், இதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கான மதிப்பீடுகள் குறித்து சிறுகுறு தொழில்முனைவோர் தொழில் அதிபர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாளை அவர் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறார் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று இரு அமர்வுகளாக நடைபெறுகிறது, காலை 11-30 மணி முதல் 11-40 மணிவரை ஒரு அமர்வும் 2.30 மணி முதல் 2.40 மணி வரை ஒரு அமர்வாக இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,