பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிய 2 ரவுடிகளை காவல்துறையினர் கைது
திருவள்ளூர் அருகே முன்விரோத பகை காரணமாக பிரியாணி கடை உரிமையாளரை வெட்டி தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர்கள் அருணாச்சல பாண்டியன், மகாராஜன், கணேசன், சகோதரர்கள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து திருமழிசை மெயின் ரோட்டில் கஸ்தூரி பவன் என்கிற ஹோட்டலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி கடைக்கு வந்த ரவுடிகள் ஓசி பிரியாணி கேட்டுள்ளனர். ஆனால் கடை உரிமையாளர் தரவில்லை. பிரியாணி தர மறுத்ததால் ரவுடிகள் அந்த கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து அருணாச்சல பாண்டியன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவரின் புகாரின் அடிப்படையில் முக்கிய குற்றவாளி எபி (எ) எபினேசர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த எபி என்ற எபினேசர் ரவுடி அவரை போலீசில் சிக்க வைத்த பிரியாணி கடைக்கு சென்று தனது கூட்டாளிகளுடன் கடையில் இருந்த உரிமையாளர் மகாராஜனை சரமாரியாக வெட்டி தப்பி ஓடினார்கள். இதனால் படுகாயம் அடைந்த மகாராஜனை உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அனிமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்ட 4 பேரையும் தீவிரமாக தேடி வந்திருந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஏபி என்ற எபினேசர் (32) அவனுடைய கூட்டாளி சதீஷ் (22)என்பவர் திருமழிசை துணைக்கோள் நகர பின்புறத்தில் பாழடைந்த வீட்டில் பதுங்கியிருந்தவர்களை வெள்ளவேடு தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.