மனைவி மீது சந்தேகம்.. நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவி கொலை

Loading

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், முடப்பாலம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 30). இவருக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 3-ந்தேதி காலையில் பேச்சிமுத்து தனது படுக்கையில் பிணமாக கிடந்தார். அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாக சுதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவரது தாய் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் பிரேதபரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரின் மனைவியிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கணவனை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், தன் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் அடிக்கடி தகராற்றில் ஈடுப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply