இந்திய கால்பந்து கழக நடுவராக தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ். பகவத்சுந்தர் ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Loading

இந்திய கால்பந்து கழக நடுவராக தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ். பகவத்சுந்தர் ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைப் போற்றும் வண்ணம் தூத்துக்குடியில் ஆல் இந்தியா சேம்பரில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஃபுட்பால் அசோசியேசன் பிரசிடென்ட் மற்றும் ஆல் இந்தியா ஃபுட்பால் பெடரேஷன் செயல் உறுப்பினர், தூத்துக்குடி வில்சன் அதிபர் ஜே. சேசையா வில்லவராயர், தூத்துக்குடி கால்பந்தாட்ட கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு செலக்சன் கமிட்டி மற்றும் பைனான்ஸ் கமிட்டி உறுப்பினருமான ஜெ.ஆல்ரின் மிராண்டா, சிறப்பு அழைப்பாளர்கள் தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மற்றும் பயிற்சி டிஎஸ்பி கணேஷ் குமார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செனட் மெம்பர் விவேகம் ரமேஷ், பழரசம் ப. விநாயகமூர்த்தி,பிலட் ஜெயபால்,ஆனந்த் மொரால்ஸ், பாஸ்கரன் டிஸ்டிக் ஸ்போர்ட்ஸ் கிளப் . தமிழ்நாடு மின்வாரிய உதவி நிர்வாக செயற்பொறியாளர் செந்தில் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பகவத் சுந்தர்ஜி அவர்களை வாழ்த்தி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவினை நன்செய் அறக்கட்டளை செந்தில் ஆறுமுகம். சுபா சுப்புராஜ், தாமிரபரணி முருகேசன், சிவசுப்பிரமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

0Shares

Leave a Reply