ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஶ்ரீ சாய் சக்தி பார்க்கிங் பேலசில் அன்னதானம்
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஶ்ரீ சாய் சக்தி பார்க்கிங் பேலசில் செஞ்சியில் இருந்து நடை பயனமாக திருப்பதி செல்லும் சுமார் 200 பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஶ்ரீ சாய் சக்தி பார்க்கிங் பேலஸ் உரிமையாளர்கள் துரை.தட்சிணாமூர்த்தி, டாக்டர். லோகேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன், ரஞ்ஜித்குமார், விஸ்வநாதன், பவன்குமார் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் அன்னதானம் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.