தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?

Loading

எந்த வகுப்புக்கு? அமைச்சர் அன்பில் வெளியிட்ட தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினுக்கு செய்து இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று 30055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 31,94,260 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போன மாசம் வாக்குறுதி கொடுத்தார்.. இந்த மாசம் நிறைவேற்றிட்டார்.. ஆனந்த் மகிந்திராவுக்கு பாராட்டுகள்

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் தற்போது 2,11,270 பேர் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். 29,45,678 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 29,45,678 பேர் தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் தினசரி பலி எண்ணிக்கை 30க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதிக கேஸ்கள் பதிவானாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு லாக்டவுன்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லாக்டவுனில் தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஞாயிறு முழு லாக்டவுன் உள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது கொரோனா கேஸ்கள் குறையும் சூழ்நிலை நிலவுவதால் லாக்டவுன் தளர்வுகள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினுக்கு செய்து இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா கேஸ்கள்
கொரோனா பரவல் காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிகள்
இந்த நிலையில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். கொரோனா கேஸ்கள் குறையும் சூழ்நிலை உள்ளதாலும், தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாலும் இந்த பரிந்துரையை செய்து உள்ளோம்.

பள்ளிகள் அன்பில் மகேஷ்
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த ஆலோசனை செய்து வருகிறோம். 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். கொரோனா கேஸ்கள் தொடர்பாக சுகாதாரத்துறையுடன் ஆலோசனைகளை செய்து வருகிறோம். ஆலோசனைக்கு பின்பாக தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் வெளியிட்டுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *