தேர்தல் தேதி வெளியான நிலையில் ஓபிஎஸ் விறுவிறுப்பான நேர்காணல்
சென்னை, ஜன- 27 நகர்ப்புற உள்ளாட்சி்த்தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அதிமுக தரப்பில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடந்தது, அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்டம், சின்னமனூர் நகரம் மற்றும் குச்சனூர், ஹைவேவிஸ், ஓடைப்பட்டி, மார்கையன்கோட்டை ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், அக்கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்திருந்தவர்களை நேர்காணல் நடத்தினார். அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் . ஜக்கையன், , தேனி மாவட்ட அதிமுக செயலாளர் . சையதுகான், \தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், எம்பியுமான . ரவீந்திரநாத், , உள்ளிட்டோரும் உடனிருந்தனர்