ரூ.46.92 லட்சம் மதிப்புள்ள 1,062 கிராம் சுத்தத் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

Loading

சென்னை, 18 ஜனவரி, 2022

சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து வந்த இரண்டு பயணிகளை இடைமறித்து சோதனையிட்டபோது மின்மாற்றிக்குள் மறைத்து வைத்திருந்த எட்டு தங்கக்கட்டிகள் மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1,062 கிராம் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.46.92 லட்சமாகும். தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இரண்டு பயணிகளையும் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply