மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பல்வேறு புதிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்
![]()
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 10.01.2022 இன்று ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பல்வேறு புதிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் , பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் , பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்கள் . அந்நிகழ்ச்சியினை முன்னிட்டு , மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார் . உடன் மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ,மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன் உட்பட பலர் உள்ளனர் .

