Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31, 2021

சென்னை: பிலவ வருடம் மார்கழி 16 ஆம் தேதி டிசம்பர் 31, 2021 வெள்ளிக்கிழமை. துவாதசி பகல் 10.40 மணிவரை அதன் பின் திரயோதசி. அனுஷம் இரவு 10.04 மணி வரை அதன் பின் கேட்டை. சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. செயல்களில் நிதானம் தேவை. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். திடீர் பண வரவு வரும். தொழில் வளர்ச்சிக்காக செய்யும் புதிய திட்டங்களால் வெற்றி கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். வியாபார ரீதியான முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்று நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் நன்மைகள் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தனவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசியில் கேது உடன் பயணம் செய்யும் சந்திரனால் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.

தனுசு
சந்திரன் இன்று விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படலாம் பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *