ஏழைகள் நெஞ்சத்தில் இன்னமும் எம்ஜிஆர்
ஏழைகள் நெஞ்சத்தில் இன்னமும் எம்ஜிஆர் இறக்கவில்லை.. மக்கள் திலகத்தின் 34வது நினைவு தினம் இன்று!
சென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓடி ஓடி உழைக்கணும், தரைமேல் மேல் பிறக்க வைத்தாய், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான், விவசாயி, என தனது ஒவ்வொரு திரையுலக பாடல்களிலும் ஏழை மக்களின் வாழ்வியலை பற்றிய கவலை அதிகம் இருந்ததால் தான் அவர் என்றும் மக்கள் திலகம் என்று போற்றப்படுகிறார். இந்தியாவிலேயே நடிகராக இருந்து நாட்டின் முதல்வராக மாறிய முதல் நபர் எம்ஜிஆர் தான் இன்றும் அவர் பெயரை பயன்படுத்தாமல் எந்தவொரு அரசியலும் தமிழ்நாட்டில் நடப்பது கிடையாது.
வள்ளல் எம்ஜிஆர் 8வது வள்ளல் என்றே ஏழை மக்களால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். இப்போதும் யாராவது தான தர்மம் செய்தால் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே வாரி கொடுக்கிறார் என்றே பாராட்டப்படுகின்றனர். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்கள் மக்களுக்கு தொண்டு செய்வதையே முன்னிறுத்தி வாழ்ந்தவர் எம்ஜிஆர் என பல அரசியல் தலைவர்களே பாராட்டி உள்ளனர்.
துள்ளல் நடிப்பு பழைய படங்கள் என கிட்ஸ்களும் எம்ஜிஆர் நடித்த படங்களையோ பாடல்களையோ அவ்வளவு எளிதில் உதாசினப்படுத்தி விட்டு சென்று முடியாத அளவிற்கு இன்றைய இளைஞர்கள் எம்ஜிஆர் படங்களையும் கருத்துள்ள பாடல்களையும் பார்ப்பவர்கள் இதைத்தான் மற்ற நடிகர்கள் பட்டி டிக்கரிங் செய்து இப்போதும் ஓட்டிக் கொண்டு இருக்கின்றனரா என்றே எண்ண தூண்டும்.
எம்ஜிஆர் இறக்கவில்லை இன்னமும் சில கிராமங்களில் எம்ஜிஆர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருக்கும் பாட்டிமார்களும் தாத்தாக்களும் உள்ளனர் என கூறுவது வெறும் பகடி அல்ல பல ஏழை மக்களின் இதயங்களில் இன்றும் இதயக்கனியாக வீட்டில் போட்டோ வைத்து பூஜை செய்யும் இறைவனாகவும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
34வது நினைவு தினம் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்து தந்தையின் வேலை ரீதியாக கேரளாவில் தஞ்சம் புகுந்த ராமசந்திரன் நாடகங்களில் நடித்து 1936ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து பல வெற்றி படங்களை கொடுத்து பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1977ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கே முதலமைச்சரான எம்ஜிஆர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 24ம் தேதி 1987ம் ஆண்டு காலமானார். இன்று புரட்சித் தலைவரின் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.